Monday, 27 August 2012

விஸ்வரூபம்’ அக்டோபரில் ரிலீஸ்: செப்டம்பர் மாதம் இசை வெளியீடு

விஸ்வரூபம்' அக்டோபரில் ரிலீஸ்: செப்டம்பர் மாதம் இசை வெளியீடு


கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். இதில் கதாநாயகியாக பூஜாகுமார் நடிக்கிறார். அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மு� ��்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

அப்போதே படம் விரைவில் திரைக்கு வரும் என பேசப்பட்டது. அதுவும் டிசம்பரில் வெளியாக உள்ள கோச்சடையான் படத்திற்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளி யாகின.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன் மனதிலும் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக பதுங்கி இருந்த கதை என்பதால், ரசிகர்கள் மனதிலும் அது தங்கும் என்று கமல் நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் கமல் படம் என்றாலே பல புதிய அம்சங்கள் இருக ்கும். இதனால் கமலின் விஸ்வரூபத்தைக் காண அவரது ரசிகர்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.
.

No comments:

Post a Comment

Popular Posts

My Blog List